சிவயோகசுவாமிகள்

இப்பகுதி முழுவதும் எங்கள் குருபரனான யோகசுவாமிகளது உத்தம துறவுச் சீடர்களில் ஒருவரான செல்லத்துரை சுவாமியவர்களால் ஆக்கப்பெற்ற யோகசுவாமிகள் வாழ்க்கையும் வழிகாட்டுதலும் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்.

ஆசான் அருளால் ஆசானாயினார்

சிவயோகசுவாமிகளது நெறி குருநெறி. செல்லப்பதேசிகர் அவரது ஞானகுரு. செல்லப்பதேசிகரைச் சிவயோகசுவாமிகள் ‘இன்பசாகரமோனம்’ என்னும் வடிவாகக்கண்டார். மௌனமுனிவரான செல்லப்பர் சிவயோகசுவாமிகளைச் சாலம் செய்து தன்வசமாக்கினர். சதுர்வித உபாயத்தால் தானாகச் செய்தனர். ஆசான் அருளால் ஆசானாகிய சிவயோகக் குருமணி அரைநூற்றாண்டு காலமாக இச்சிவபூமியிலே ஞானதேசிகராய் நடமாடினார்.

வெளி இணைப்புக்கள்:

சுவாமிகளின் அடியவர்களான முன்னாள் கனடியத் தூதுவர் Dr. James George  பத்திரிகையாளர்களான Sam Wickramasinghe மற்றும் Susunaga Weeraperuma என்பவர்கள் வழங்கிய குறிப்பைக் காண கீழே அழுத்துக.

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/sivathon/public_html/wp-includes/functions.php on line 4556