
ஓம்
வாழ்க சிவனடி வாழ்க சிவனடி
வாழ்க சிவதொண்டன்
பல்வினை போக்கி நல்லருள் ஆக்கிப்
பல்குக சிவதொண்டன்
பாழ்செயும் மாயா காரியம் அகலப்
பணிசெய் சிவதொண்டன்
பக்தர்கள் எல்லாம் பாட ஆடப்
பரவுஞ் சிவதொண்டன்
ஊழ்வினை போக உள்ளொளி ஓங்க
உயர்க சிவதொண்டன்
உண்மை முழுவதும் என்றுரை செய்யும்
ஒருவன் கழல்வாழ்க
-நற்சிந்தனை-