-
நன்மோன நிறைவே
சிவதொண்டன்
நிலையத்துக்
குறிக்கோள்.
இந்நன்மோன நிறைவுக்கு இடையூறேதும் நேராதவண்ணம் சிவதொண்டன் அன்பர்கள்
நடந்துகொள்ளுதல் கடப்பாடாகும்.
-
சிவதொண்டன்
நிலையத்துக்கு வரும் தொண்டர்கள்
பாதணிகளைக்
கழற்றி,
கால்களைச் சுத்தஞ் செய்துகொண்டு உள்ளே
போகவேண்டும்.
|
 |
|
-
தத்தமக்கெனக்
குறிக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்தல்வேண்டுமன்றிப்
பிறர் விஷயங்களில் தலையிடக்கூடாது.
-
அன்பர்கள்
புறத்தூய்மையோடு உள்ளத் தூய்மையுடையவர்களாக
இருத்தல்வேண்டும்.
-
இந்நிலையத்திற்கு வரும் அன்பர்கள் திருமுறை ஓதலோ,
புராண படனமோ நடைபெறும்போது ஒழுக்கமான முறையில்
நடந்துகொள்ளுதல் வேண்டும். பிறரெவர்க்கும் அசௌகரியத்தை
உண்டுபண்ணக்கூடாது.
-
சிறப்பாக
மேற்குறித்த சமயங்களில், பொதுவாக எந்த நேரத்திலும்
சிவத்தியானம், சமய சம்பந்தமான விஷயங்கள் ஆகியனவற்றைப்
பற்றியன்றி உலகார்த்தமான விஷயங்கள் எவற்றையும் பேசுதல் கூடாது.
-
நிலையத்தினுட் புகைப்படமெடுத்தல் முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.
|
|