யாழ்ப்பாண நிலையம்

யோகசுவாமிகளின் திருவுளப்படி யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையம் வடக்கின் தலைநகரமாகிய யாழ் நகரத்திலே காங்கேசன்துறை வீதியருகாக 1953 ஆம் ஆண்டு நிறுவப்பெற்றது. தமது முன்னிலையில் இருக்கும்பொழுது அன்பர்கள் மெய்ஞ்ஞான விளக்கம் பெற்றது போலவே, தமது திருவடிக்கலப் பின் பின்னரும் விளக்கம் பெறவேண்டுமென்ற சுவாமிகளின் எல்லையற்ற கருணை இந்த ஞானச் சுடர்விளக்காக மலர்ந்தது. தாம் இந்த ஞானப்பண்ணையை அமைத்தது தமக்குப் பின்னர் தமதன்பர்கள் ‘தட்டுக் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக’ எனக் கூறிச் சுவாமிகள் இதனைத் தெளிவு படுத்தினார்.

jaffna2
யாழ் சிவதொண்டன் நிலையத்தின் முகப்புத்தோற்றம்

jaffna thiruvadiதியானமண்டபத்தில் திருவடி வீற்றிருக்கும் பீடம்

jaffna4

புராண மண்டபத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள சுவாமிகளின் திருவுருவம்

இச்சிவதொண்டன் நிலையத்தில் தியானமண்டபம், புராணமண்டபம் என்பவற்றுடன் சுவாமிகள் சிலநாள்கள் உறைந்த அறையும் பூசனைக்குரியதாக உள்ளது. அவ்வறை சுவாமிகள் உபயோகித்த அரும்பொருள்களைக் கொண்ட ஒரு நூதனசாலைக்குரிய பண்புடனும் விளங்குகின்றது.

jaffna3சுவாமிகள் சிவதொண்டன் நிலையத்தில் சில நாட்கள் உறைந்த அறை

இந்நிலையத்தின் பொறுப்பாளராயிருந்த சுவாமிகளின் வழியடியாரான செல்லத்துரை சுவாமிகள் இச்சிவதொண்டன் நிலையத்திற்குரிய ஒரு தனித்துவமான மரபினை ஏற்படுத்தினார்.

யாழ் சிவதொண்டன் நிலையம் தனது ஆண்டு விழாவினை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் திகதி கொண்டாடுகின்றது.