யாகநாட் சிந்தனை 05-06-2016

இன்று சிவதொண்டர்க்கெல்லாம் யாகநாள். இந்த யாகநாளில் நற்சிந்தனை உரைநடைப் பகுதியில் சன்மார்க்கம் தலைப்பிலுள்ள ஒரு பகுதி தியான மந்திரமாகத் தரப்படுகின்றன.

சன்மார்க்கம்

ஆன்மலாபமே பொருளெனக் கண்ட அறிஞர் அநித்தியமான இந்த உலக இன்ப துன்பத்தில் மயங்காது தாமரையிலையில் நீர் போல சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம லாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத்துன்ப இன்பத்தினாற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்மலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு நன்மை தீமையை வென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங்களைக் களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப்பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.

அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார் ……..

-நற்சிந்தனை