ஆயிலிய நாட்சிந்தனை
உ சற்குருதரிசனம் இராகம் – சாமா …
உ சற்குருதரிசனம் இராகம் – சாமா …
‘ காட்டிலே காளியுடன் கூத்தாடும் கண்ணுதலோன் நாட்டிலே ஞானகுருவாய் நயந்து வந்து மீட்டான் அவன்றன் விரையார் மலரடியை மாட்சிமைசேர் நல்லைத்தேர் மாணடியிற் கண்டேன்.’ – நற்சிந்தனை – மாட்சிமைசேர் நல்லை காலன் வலிதொலையக்…
நல்லூரைக் கும்பிடு இராகம் – ஜோகினி தாளம் – ஆதி பல்லவி நல்லூரைக் கும்பிட்டுநீ பாடு – அதனாலே நாட்டிலுள்ள பிணிகள் ஓடும் அநுபல்லவி செல்லாதே…
எனக் கின்பமே வா இராகம் – தோடி தாளம் – திஸ்ரம் பல்லவி எனக்கின்பமே – வா…
தாயினு மன்பு தழைத்த குருவே தயாபரனே தீயினு மிக்க திருமேனி யும்நின் திருவடியும் நாயினு மிக்க கடையேனை ஆள நலமுடனே ஞாயிறு தோறும் வருவாய்நல் லூரில்வாழ் நாயகமே.
இனியே தெனக்குன் னருள்வரு மோவென வேங்கிமனம் தனியே யிருந்து வருந்து தையோசத்தி வேல்முருகா கனியே கனியி ரசமே அடியனேன் கண்களிக்கச் சனிவாரம் தன்னில் வருவாய்நல் லூலில்வாழ்சண்முகனே.
புள்ளிக் கலாப மயிலேறும் வேலவ புண்ணியனே தெள்ளித் தெளிந்தவர் சித்தத்தி லூறும் தெளியமுதே வள்ளிக் குகந்தவ னேமுரு காமற வாமலெனை வெள்ளிக் கிழமை வருவாய்நல் லூரில்வாழ் வேலவனே.
தயாநிதி யேயென்று தாள்போற்றும் அன்பர் தமக்குவரும் வியாதி வறுமை விலக்கு மருந்தே விழுப்பொருளே தியான நிலையி லுனைக்கண்டு தேறித் தெளிவதற்கு வியாழக் கிழமை வருவாய்நல் லூரில்வாழ் வேலவனே.
பதமலர் போற்று மடியவர் தம்மைப் பரிவுடனே இதமுடன் காக்குங் குருமணி யேயெழில் சேர்முருகா சதமுனை யன்றி ஒருவரு மில்லையித் தாரணியிற் புதனெனும் வாரம் வருவாய்நல் லூரில்வாழ் புண்ணியனே.
ஒவ்வா தனசொல்லி ஊரூர்கள் தோறும் உலைந்தலையும் இவ்வீணற் காக்க இனிவரு வாயிள வேல்முருகா தெய்வானை வள்ளி தினமும் அணிசெய்யுஞ் சேவகனே செவ்வாய்க்கிழமை வருவாய்நல் லூரினிற் றேசிகனே.