சிவதொண்டன் ஏடு

சிவதொண்டன் ஏடு

சிவயோகசுவாமிகளது சிந்தையிற் குடிகொண்டிருந்த சிவதொண்டன் ஏடு ‘பவவருடத்துப் பன்னுமார்கழி’யில் (1935 ஜனவரி) உதயம் செய்தது. இவ் ஏடு ‘ஓம்’ எனும் தாரகத்தினையும் ‘எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்’ என்னும் சுலோகத்தினையும் தாங்கி வரும் செந்தமிழ் ஆங்கிலத் திங்கள் வெளியீடாகத் திகழ்கிறது. மூன்றாம் இதழ் முதலாக ‘நற்சிந்தனை’ எனும் மகுடம் சூடி சுவாமிகளது திருவாய்மொழிகள் மலரலாயின. இந்நற்சிந்தனை என்னும் நல்லமுதம் சிவதொண்டனின் உயிரோசையாயிற்று.
சிவதொண்டன் ஏடு தாளமேளமில்லாதது. விளம்பரப் பக்கங்கள் அதிற்கிடையாது. அடக்கமாகத் திங்கள் தோறும் அன்பர்கள் இல்லம் சென்று அவர்கள் சிந்தனையை தெளிவுபடுத்தும் பணியைச் செம்மையாகச் செய்கின்றது.
‘தளர்ச்சியென்பது தானறியாத’ சிவதொண்டன் 2011ஆம் ஆண்டு தனது பவளவிழா மலரினைச் சிறப்புற வெளியிட்டுக் கொண்டாடினான்.[ மேலும் ]

சிவதொண்டன் ஏட்டிற்கான ஆக்கங்களை அனுப்புதல்

அன்பர்கள் தங்களது முன்னமே பிரசுரிக்கப்படாத ஆக்கங்களை சிவதொண்டன் ஏட்டிற்காக அனுப்பி வைக்கலாம். தக்க ஆக்கங்கள் சேர்த்துக்கொள்ளப்படும். ஆக்கங்களை ஆசிரியர், சிவதொண்டன் நிலையம், செங்கலடி-30350, இலங்கை (The Editor, Sivathondan Nilayam, Chenkaladi-30350, Sri Lanka) என்னும் முகவரிக்கோ அல்லது editorsivathondan@ymail.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

சிவதொண்டன் ஏட்டின் அங்கத்தவராக விரும்புவோர் அங்கத்துவப்படிவப் படிவத்தினை பூரணப்படுத்தி யாழ்ப்பாணம் அல்லது செங்கலடி சிவதொண்டன் நிலையத்திற்கு தபால்மூலம் அனுப்பி வைக்கலாம் (முகவரிகளைத் தொடர்புகள் பக்கத்திற் காண்க).

அங்கத்துவப்படிவம்

சிவதொண்டன் ஏட்டிற்கான அங்கத்துவப் படிவத்தினை இங்கு தரையிறக்கிக் கொள்ளலாம்.

சந்தாவிபரம்

ஆண்டுச் சந்தா: Rs. 500 (இலங்கை), $ 20 (வெளிநாடுகள்)

ஆண்டுச் சந்தாக்கான காசுக்கட்டளைகள், தபாற்கட்டளைகள், காசோலை முதலியன மூலமும் நேரிலும் செலுத்தலாம். காசுக்கட்டளைகள், தபாற்கட்டளைகள், காசோலை என்பன ‘சிவதொண்டன் சபை, 434, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை’ (The Sivathondan Society, 434, K.K.S Road, Jaffna, Sri Lanka) என்னும் பெயருக்கு எடுத்தல் வேண்டும்.