சமாதிக் கோயில்

சுவாமிகள் அரைநூற்றாண்டு காலம் உறைந்த கொழும்புத்துறைக் கொட்டில் இன்று சமாதிக்கோயிலாகப் பரிணமித்து நிற்கின்றது. இது திருவடி பிரதிட்டை செய்யப்பெற்றிருக்கும் கருவறையைக் கொண்ட திருமிகுந்த கோயில். சுவாமிகள் அன்பர் சூழ வீற்றிருந்த அறை இக்கோயிலின் ‘திருவோலக்கமண்டபம்’ என்று சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. சுவாமிகள் விசர்க்கோலத்தில் வீற்றிருத்தற்குத் தெய்வபீடிகையாகத் தன் வேரினை அமைத்த இலுப்பைமர வித்தினின்றும் முளைத்த கன்று இன்று இளமரமாய் மூலத்தான விமானத்துக்குக் குடை விரித்து நிற்கின்றது.


Samathikolyiகொழும்புத்துறை சமாதிக்கோயிலின் தற்போதைய தோற்றம்


samathiதிருவடி பிரதிட்டை செய்யப்பெற்றிருக்கும் கருவறை