குறிக்கோள்

சிவதொண்டன் நிலையக் குறிக்கோள்

சிவதொண்டன் நிலையக் குறிக்கோள் தன்னையறிதல். அதவாது மாந்தரெல்லாம் சிவத்தியானம் ஊடாகச் சும்மாயிருக்கும் சூட்சமான தன் உண்மை நிலையயை உணர்தல்.

                  “சிவதொண்டன் நிலையத்திற் சேரீர்

                             தியானஞ் செய்துகடைத் தேறீர்

                   மவுனமாய் இருந்திளைப் பாறீர்

                             மந்திர மிதுவெனக் குறியீர்.”

                                                          –நற்சிந்தனை

 “சிவதொண்டன் நிலையத்தில் எல்லாரும் மௌனமாயிருந்து
உண்மையை  உணரவேண்டும்”

                                                          –அருள்மொழி

என்னும் சுவமிகளது அருமைத் திருவாக்குகள் மூலம் சிவதொண்டன் நிலையம் ஒரு தவச்சாலை என்பதும், அதன் குறிக்கோள் தன்னை அறிதல் என்பதும் தெளிவாகிறது.

                       “தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்

                        தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்

                        தன்னை அறியச் சகலமு மில்லைத்

                        தன்னை அறிந்தவர் தாபத ராமே”

                       “தன்னைத் தன்னால் அறிவார் சான்றோர்

                        தன்னைத் தன்னால் பணிவார் சான்றோர்

                        தன்னைத் தன்னால் பிறிவார் சான்றோர்

                        தன்னைத் தன்னால் தேடுவார் சான்றோர்”

                                                                      –நற்சிந்தனை