ஒழுங்கு விதிகள்

நிலையத்தினுள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குவிதிகள்

  • நன்மோன நிறைவே சிவதொண்டன் நிலையத்துக் குறிக்கோள். இந்நன்மோன நிறைவுக்கு
    இடையூறேதும் நேராதவண்ணம் சிவதொண்டன் அன்பர்கள் நடந்துகொள்ளுதல் கடப்பாடாகும்.
  • சிவதொண்டன் நிலையத்துக்கு வரும் தொண்டர்கள் பாதணிகளைக் கழற்றி, கால்களைச் சுத்தஞ் செய்துகொண்டு உள்ளே போகவேண்டும்
  • தத்தமக்கெனக் குறிக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்தல்வேண்டுமன்றிப் பிறர் விஷயங்களில் தலையிடக்கூடாது.
  • அன்பர்கள் புறத்தூய்மையோடு உள்ளத் தூய்மையுடையவர்களாக இருத்தல்வேண்டும்.
  • இந்நிலையத்திற்கு வரும் அன்பர்கள் திருமுறை ஓதலோ, புராண படனமோ நடைபெறும்போது ஒழுக்கமான முறையில் நடந்துகொள்ளுதல் வேண்டும். பிறரெவர்க்கும் அசௌகரியத்தை உண்டுபண்ணக்கூடாது.
  • சிறப்பாக மேற்குறித்த சமயங்களில், பொதுவாக எந்த நேரத்திலும் சிவத்தியானம், சமய சம்பந்தமான விஷயங்கள் ஆகியனவற்றைப் பற்றியன்றி உலகார்த்தமான விஷயங்கள் எவற்றையும் பேசுதல் கூடாது.
  • நிலையத்தினுட் புகைப்படமெடுத்தல் முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.

 

mounam