ஆயிலிய நாட்சிந்தனை

சற்குருதரிசனம்

இராகம் – சாமா                                                                                                                          தாளம் – ஆதி

பல்லவி

சற்குருதரிசனம் சகலபாக்கியசுகம்

தாளிணைபணிநீதினம்

அநுபல்லவி

தாந்தன்னையறியூமே

சாந்தமுஞ் செறியூமே

(சற்குரு)

சரணங்கள்

பேரன்புபெருகிடும் பேதைமைகருகிடும்

பிரியாப் பிரியமெல்லாம் பேசாமலகன்றிடும் – சற்குரு

ஆகமவிதிமுறை அகத்தினில் பொருந்திடும்

ஆசாபாசமகலும் நேசானுபூதிவரும் – சற்குரு

தேவாதிதேவர்களுஞ் செய்வார்பணிவந்து

சிவன் சிவனென்னுந் தெளிவூமுண்டாகுமே–சற்குரு

சற்குருதரிசனம்

மெய்ப்பொருள்,

மெய்யடியாருக்கு,

மெய்யூணர்வளித்தற் பொருட்டுத்,

தாங்கிவரும் அருள்மேனி,

சற்குருதரிசனம் எனப்படும்.

சற்குரு–சத்+குருஸ்ரீசற்குரு (சத் – மெய்ப்பொருள்)

அவ்வாறு தாங்கிவரும் அருள்மேனியை அவ்வருள்மேனி ஊட்டும் மெய்யூணர்வினாலே மெய்யடியான் மெய்ப்பொருளெனக் காண்டல் சற்குருதரிசனமாகும்.

தேரடிப்படியிலேயிருந்த செல்லப்பன் என்னும் சீமானைச் சுவாமிகள் அச்சீமான் அருளிய மெய்யூணர்வினாலே கண்ணாரக் கண்டுகளித்தனர். இதனை அவர்தம் குருதோத்திரப் பாடல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. அப்பாடல்களிலுள்ள கண்டபத்து இக்காட்சியையே விளக்கமாகக் கூறுகிறது. அதற்கோர் சாட்சியாக மேல்வரும் பாடல் தரப்படுகிறது.

“மாலயனுந் தேடி யறியா மலரடிகள்

கோலவருட் குருவாய்க் குவலயத்திலே போந்து

சாலப் பெரும்பகையைத் தானீக்கி யாண்டானை

ஞாலம் புகழுநல்லைத் தேரடியிற் கண்டேனே”

சகலபாக்கியசுகம்

சற்குருதரிசனம் சகல அழியாச் செல்வத்தையூம் மாறாஇ மறையா, குறையா, நிறையாச் சுகத்தையூம் தரும். இப்பாக்கிய சுகத்தை அநுபல்லவி செறிவாயூம் சரணங்கள் அதன் அமிசங்கள் சிலவற்றையூம் கூறுகின்றன.

தாளிணைபணிநீதினம்

சற்குருதரிசனமும் அதனால் ஏற்படும் சகலபாக்கிய சுகத்தையூம் அனுபவிப்பதற்குரிய நேரிய சாதனை திருவடி வணக்கமே யாம். ஏனெனில் மாலயனுந்தேடி அறியாத அம்மலரடிகளே கோலவருட் குருவாய் குவலயத்திலே வருதலாலாம்.

அநுபல்லவியிற் செறிவாகக் கூறப்படும் பாக்கியசுகம்

தன்னையறிதலும் சாந்தசுகம் பெருகுதலுமே சகலபாக்கியங்களையூம் சகலசுகங்களையூம் அடக்கி நிற்கும் தன்னிலையாகும். தன்னைப் புலனறிவூ அறியா. மனம் கற்பனையிலும் காணா. நூதனவிவேகம் நுழைந்தும் உணரா. ;நான்;’ எனும் தன்மைச்சுட்டுத் தலை கவிழ்ந்து ‘தான்’ என்னும் தன்மைஇ முன்னிலை, படர்க்கையற்ற சுட்டிறந்த மெய்ப்பொருள் தலையெடுத்த இடத்தில் மாத்திரம் அறியவேண்டிய தேவையே இல்லாது தான் தன்னை அறிந்து தன்மயமாயிருக்கும். அப்போது சாந்தசுகம் பெருகும்.

சகலபாக்கியசுகத்தின் சில அம்சங்கள்

1. பேரன்புப் பெருக்கு: தன்னையறியச் சகலமுமில்லாமற் தன்னையே சகலத்திலும் கண்டு தன்னுயிர் போல் மன்னுயிரனைத்தையூம் நேசிக்கக் கூடியதாயிருக்கும்.

2. பேதைமை கருகிடும் : நான், நீ, அவன், அவள், அது, பெரியவன், சிறியவன் என்ற பேதைமை அகன்றிடும்.

3. பிரியாப் பிரியமெல்லாம் பேசாமலகன்றிடும்: தந்தை, தாய், மைந்தர், தமர், தாரம் என்னும் பந்தம்(கட்டு) பிரியாப் பிரியமாகும். அப்பந்தம் சிரமமெதுவூமெடுக்காமலே கண்படுப்போன் கைப்பொருள் போல் மெல்லக் கழன்றுவிடும்.

4. ஆகமவிதிமுறைஅகத்தினிற் பொருந்திடும்:  ஆகமவிதிமுறையாவது சிவபூசையாதிய ஆசார அநுட்டானங்கள். இவை புற ஒழுக்கங்களாக மாத்திரமன்றி இவற்றின் பொருளுணர்ச்சி அகத்திலே பொருந்தச் சதாபூசையாக மலரும். செல்லப்பர் புறத்திலே ;நீறுமணியான் நெற்றியிலே பொட்டுமிடான்’ என்று சொல்லும் படியே தோன்றினார். ஆனால் அவரைச் சுவாமிகள் ;இயமநியமங்களில் எள்ளளவூம் பிசகான்’என்றும் திருவடிமறவாச் சீருடையாளன் என்றும் போற்றுவார்.

5. ஆசாபாசம் அகலும்: ஆசாபாசம் என்பது பெண்ணாசை, பொன்னாசை, ஆதிய போகப் பற்றுக்கள். இப்போகப்பற்று அகன்று போகும். வானம் வந்தாலும் பூமிவந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாது சாட்சியாய் இருக்கும் மாட்சிமை வாய்க்கும்.

6. நேசானுபூதிவரும்: அநுபூதி சுத்தமான தன்மயமாகும். அந்தத் தன்மயம் தன்னை நேசித்த வண்ணமிருக்கும். அதுவே அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் சிவயோகியரின் தன்மய நிலை போலும்.

7. தேவாதி தேவர்களும் செய்வார் பணிவந்து: தன்னையறிந்த பெரியோர்க்கு மூவரும் தேவரும் ஏவல் செய்வர். செல்லப்பர் மண்ணையூம் விண்ணையூம் எண்ணுமுன்னே ஆக்கவல்லவராய் இருந்தார். சுவாமிகள் come down என்றால் மழைபெய்தது.

8. சீவன் சிவன் என்றதெளிவூமுண்டாகும் : இதுவே முடிந்தஞானம். சீவன் ஒடுங்கச் சிவன் பிரகாசித்தல் நான் தலை.தாழ்க்கத் தான் தலை யெடுத்து நிற்றல். நான் தானாய் விளங்குகின்றான் எங்கள் குருநாதன் என்பதும் நான் கரைந்து தான் ஒன்றே விளங்குவதை உணர்ந்து கொண்டிருத்தலே தன்னையறிதலும் சற்குருதரிசனமும் சகலபாக்கியமும் சாந்தசுகமும் போலும்.

இச்சற்குருதரிசனப் பாடலைப் பொருளுணர்ந்து பாடிச் சிந்தித்துத் தெளிந்து சற்குருதரிசனத்தைப் பெறும் ஒரேகுறியூடன் திருவடி வணக்கத்தில் சிரத்தையூடன் ரூடவ்டுபட இந்த ஆயிலிய நாளை வீணாக்காது பயன்படுத்திக் கொள்வோமாக. அதற்கு நம்முள்ளே தானாக நிற்கும் சங்கரன் அருள் செய்வாராக.